இந்து அமைப்புக்கு தடை.? ரூ.100 கோடி நஷ்டஈடு.! காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு நீதிமன்றம் சம்மன்.!
இந்து அமைப்புக்கு தடை விதிப்பதாக கூறிய கார்கே மீது ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு இந்து அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் பொது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பஜிராங்கி தளம் (Bajrang Dal) எனும் அமைப்பை தடை செய்வோம் என பேசி இருந்தார். அந்த அமைப்பு மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பஜிராங்கி தளமானது இந்து அமைப்பாகும்.
கார்கேவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ் கார்கே மீது பஞ்சாப் மாநிலத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், கார்கே மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் வழக்கில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி முன் வந்த போது, ஜூலை 10ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.