பச்சை நிற பெயிண்ட் கூடாது.! இந்து அமைப்பினர் எதிர்ப்பு.! நிறம் மாறிய ரயில்வே ஸ்டேஷன்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ரயில்வே நிலையத்தின் நிறம் பச்சை நிறமாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பினர்.
கர்நாடகா மாநிலத்தில் கலபுராகியில் உள்ள ரயில்நிலையத்திற்கு அண்மையில் பச்சை கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பச்சை கலர் பெயிண்ட் என்பது எதோ மத அடையாளம் போல இருக்கிறது என கூறி அந்த கலரை மாற்றக்கோரி இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இந்த எதிர்ப்பை அடுத்து கலபுராகி ரயில்வே ஸ்டேஷன் நிறம் பச்சை நிறத்தில் இருந்து வேறு நிறத்திற்கு மாற்றப்பட்டது.