நிலா – இந்து ராஷ்டிரிய நாடு.! தலைநகர் – சிவசக்தி.! பிரதமரிடம் கோரிக்கை வைத்த இந்து மகா சபை தேசிய தலைவர்.!
நமது இஸ்ரோ விஞ்ஞானிகளால் நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலமானது, கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்தது.
விக்ரம் லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டரின் உட்பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி 14 நாட்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை சிவசக்தி என பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையடுத்து, அகில இந்திய இந்து மகா சபையின் தேசியத் தலைவர் சக்கரபாணி சமீபத்தில் ஒர் வீடியோவில் கூறுகையில், சந்திரனை “இந்து ராஷ்டிரியம் ” என தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனவும்,
இந்து ராஷ்டிரிய நாட்டின் தலைநகராக லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி இடத்தை அறிவிக்க வேண்டும் எனவும் இது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்து மகா சபையின் தேசியத் தலைவர் சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.