விஷ்வ இந்து அமைப்பின் மாநில தலைவர் கொடூரமாக சுட்டுக்கொலை
- விஷ்வ இந்து மகாசபா அமைப்பின் மாநில தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இந்த கொலையானது நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் விஷ்வ இந்து மகாசபா அமைப்பின் மாநில தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் நேற்று காலை அவர் தனது சகோதரருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது இருசக்கர மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் பலமுறை சுட்டு விட்டு தப்பிச் சென்றனர்.சுட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த ரஞ்சித் பச்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் உடன் இருந்த சகோதரரும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.