இந்து மடாதிபதி தற்கொலை : குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது – முதல்வர் யோகி!
உத்தர பிரதேச மாநிலத்தின் இந்து மடாதிபதி மஹந்த் நரேந்திர கிரி தற்கொலையில், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதியா அகார பரிஷத் மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் தொடர்பாக கடிதம் ஒன்று சிக்கிய நிலையில், மன அழுத்தம் காரணமாக தான் மடாதிபதி தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அக்கடிதத்தின் அடிப்படையில் மடாதிபதியின் சீடர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மடாதிபதி நரேந்திர கிரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்றுள்ளார். அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளரிடம் பேசிய அவர், இந்த சம்பவத்தில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது.
டிஐஜி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் யாரும் இதில் இருந்து தப்பிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மடாதிபதி உடலுக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படங்களையும் முதல்வர் யோகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः।
न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः॥प्रयागराज स्थित श्री मठ बाघम्बरी गद्दी पहुंचकर महंत नरेंद्र गिरि जी महाराज के अंतिम दर्शन कर श्रद्धांजलि अर्पित की।
प्रभु श्री राम से प्रार्थना है कि उन्हें अपने परम धाम में स्थान प्रदान करें। pic.twitter.com/bf4ykHx7Ui
— Yogi Adityanath (@myogiadityanath) September 21, 2021