மொழி, கலாச்சாரம் என இந்திய வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைகின்ற மொழியாக இந்தி மொழி இருக்கிறது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டு, 12 நாட்கள் சிகிச்சை பெற்று ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் முழு மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் அமைச்சர் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் ஹிந்தி. நம் நாட்டில் சுதந்திர போராட்டத்திற்கான புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்தே ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் ஒன்றாக திரட்ட இந்தி சக்தி வாய்ந்ததாக பயன்பட்டு வருகிறது. இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை மனதில் கொண்டே புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மொழி மற்றும் புவியியல் எல்லைக்கோட்டினால் தான் ஒரு நாடு அடையாளம் காணப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவில் அதன் மொழிகள் தான் பலம். அது நம் ஒற்றுமையில் ஒரு அடையாளம் ஆகும். மொழி, கலாச்சாரம் என இந்திய நாடு வேறுபட்டிருந்தாலும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைகின்ற மொழியாக இந்தி மொழி இருக்கிறது என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அமித்ஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…