மாநில மொழிகளுக்கு இந்தி மொழி போட்டி அல்ல.! மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.!
மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது ஹிந்தி மொழி பற்றியும், பிரதான மாநில மொழிகள் பற்றியும் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில் அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டமூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும் என தெரிவித்தார்.
ஹிந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல என்றும், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை பிரதான 10 மாநில மொழிகளில் தொடங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான பாடத்திட்டங்கள் வெளியாகும் என அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.