இந்தி, ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழி – மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில்.!
இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று மாநிலங்களவை நடைபெற்று வருகிறது. அப்போது, இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தும் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் எம்.பி வைகோ கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது.