ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க்-ஆல் சுமத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளின் அறிக்கை முற்றிலும் தவறானது, மற்றும் ஆதாரமற்றது என அதானி குழுமம் கூறியிருக்கிறது. பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக, அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ரூ.46,086 கோடியை இழந்தது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கௌதம் அதானி, குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை, உயர்வு காரணமாக அவரது நிகர மதிப்பு சுமார் $120 பில்லியன் வரை உயர்ந்தது. மேலும் இந்த நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 819% சதவீதம் அதிகரித்தது என்று தெரிவித்திருந்தது.
ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அதானி குழுமத்தின், அதானி எண்டர்பிரைசஸ் எஃப்பிஓ(FPO) வை சேதப்படுத்தும் மற்றும் மோசமான நோக்கத்துடன் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டதாக அதானி குழுமம் கூறியது. ஹிண்டன்பர்க், இந்த அறிக்கையை வெளியிடும் முன், தகவலை சரி பார்ப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவோ, எங்களைத் தொடர்பு கொள்ளவோ இல்லை.
தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் குழுமத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழும சிஎஃப்ஓ ஜுகேஷிந்தர் சிங் கூறினார். எங்கள் தகவல் தெரிந்த மற்றும் அறிவார்ந்த முதலீட்டாளர்கள், இந்த ஆதாரமற்ற அறிக்கைகளால் பாதிக்கப்படுவதில்லை என மேலும் கூறினார்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…