கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு விண்ணில் பறக்கும் இமாலயன் கிரிஃபான் கழுகு.!
- நாட்டிலிலேயே முதன்முறையாக கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட வளர்ப்புக் கழுகுகள் மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளன.
- இந்த வகை கழுகுகளின் வாழ்க்கை, இனப்பெருக்க முறை தெரிவதற்காக பொருத்தப்பட்டுள்ளது என விஞ்ஞானி விபு பிரகாஷ் தெரிவித்தார்.
அரிய வகையான இமாலயன் கிரிஃபான் வகை கழுகுகளின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக பாம்பே நேச்சுரல் ஹிஸ்ட்ரி சொசைட்டி என்ற அமைப்பின் முதன்மை விஞ்ஞானி விபு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதற்காக 6 கழுகுகள் பிடிக்கப்பட்டதாகவும், அவற்றில் இரு கழுகுகளுக்கு டிரான்ஸ்மீட்டர் எனப்படும் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் இந்த வகை கழுகுகளின் வாழ்க்கை மற்றும் இனப்பெருக்க முறை தெரிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது என குறிப்பிட்ட விஞ்ஞானி விபு பிரகாஷ், மேலும் இமாலயன் கிரிஃபான் வகை கழுகுகளை மேற்கு வங்கத்தின் ராஜபத்கவா வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருவதாக குறிப்பிட்டார்.