ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை வழக்கமான பள்ளிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, இமாச்சல பிரதேச அரசு இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் குடியிருப்பு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் 21 வரை மூடப்படும். கொரோனா நிலைமை காரணமாக இமாச்சலப் பிரதேச அரசு வழக்கமான வகுப்புகளுக்கு செப்டம்பர் 21 வரை இடைநிறுத்தியுள்ளது.
இம்மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 2 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இது குறித்து இமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை பிற்பகல் உத்தரவுகளை வெளியிட்டது. ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை தற்போது ஆன்லைனில் முதல் பருவத் தேர்வுகள் எழுதப்படுகின்றன.
இருப்பினும், காரோண நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால் ஒரு வாரத்திற்கு மீண்டும் வழக்கமான பள்ளிகள் நிறுத்தப்பட்டுள்ளன. குடியிருப்பு பள்ளிகள் சமூக இடைவெளியை பராமரித்தல், முகமூடி அணிதல் போன்ற கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி வழக்கம்போல் வகுப்புகள் தொடரும்.
இன்றுவரை, மாநிலத்தில் 2,15,893 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தொற்று காரணமாக 3,623 பேர் இறந்துள்ளனர்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…