ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் சிக்கிய 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் இன்று மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ராம்பூர்-ஜூரி என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் உருண்டு மேல் விழுந்ததால் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. அருகில் சென்று கொண்டிருந்த கார் மீதும் பாறைகள் விழுந்துள்ளது.
தகவலறிந்து வந்த இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பேருந்து மற்றும் வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் பலர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…
சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…