Categories: இந்தியா

பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

Published by
மணிகண்டன்

Himachal Pradesh – 3 மாநிலங்களில் 15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் உத்திர பிரதேசத்திலும், இமாச்சல பிரதேசத்திலும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. உ.பியில் உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களில் 8 பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . சமாஜ்வாடி உறுப்பினர்கள் சிலர் மாற்றி வாக்களித்த காரணத்தால் 1 வேட்பாளர் குறைந்து 2 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சி :

அதே போல காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் களமிறக்கிய வேட்பாளரை எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெற செய்து அதிர்ச்சி அளித்துள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள 68 இடங்களில்காங்கிரஸ் 40 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. பாஜக 25 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. சுயேட்சைகள் 3 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

Read More – உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்… பிரதமர் மோடி உத்தரவாதம்!

எதிர்க்கட்சி வெற்றி :

இப்படியான சூழலில் மாநிலத்தில் இருந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கு காங்கிரஸின் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜன் போட்டியிட்டனர். அதில், காங்கிரஸ் உறுப்பினர்க 6 பேர் மாற்றி வாக்களித்து, சுயேட்சைகள் 3 பேர் வாக்களித்த காரணத்தால் எதிர்க்கட்சி பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெரும் நிலைக்கு வந்துவிட்டார்.

அமைச்சர் ராஜினாமா :

இந்த சம்பவத்தை அடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர் ஆளுநரை சந்தித்து விட்டு வந்தார். இந்த சம்பவங்களை அடுத்து இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் , இமாச்சல பிரதேச அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Read More– வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு!

விக்ரமாதித்ய சிங் அதிருப்தி :

இது குறித்து அவர் கூறுகையில், ராஜ்யசபா தேர்தலில் ஆளும் காங்கிரஸ் பாஜகவிடம் தோற்றுள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்ததில் இருந்து ஆட்சியில் விளைவு இதுவாகும். தனது தந்தை மறைந்த வீரபத்ர சிங் குறித்து காங்கிரஸ் கட்சி அலட்சிமாக நடந்து கொள்வது வருத்தமடைய செய்துள்ளது. 6 முறை மாநில முதலமைச்சராக இருந்த ஒருவர், யாரால் மாநிலத்தில் இந்த ஆட்சி அமைந்ததோ, அவரது சிலைக்கு ஒரு சிறிய இடம் கூட இந்த மாநில அரசால்  கிடைக்கவில்லை. இதுதான் மறைந்த எனது அப்பாவுக்கு இந்த அரசு காட்டிய மரியாதை என கூறியிருந்தார்.

பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் :

இப்படியான அரசியல் சூழ்நிலையில், இமாச்சல பிரதேச சட்டமன்ற சபாநாயகர் குல்தீப் சிங் பதனியா , பாஜக எம்எல்ஏக்கள் 15 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு மேலும் பரபரப்பை கூட்டியுள்ளார். சட்டமான்ற விதிமுறைகளை மீறி அவர்க செயல்பட்டதாக கூறி இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கூறப்பட்டது. இதன் காரணமாக ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் இவர்கள் அதில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Read More – விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

யார் யார் சஸ்பெண்ட் ?

எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர், விபின் சிங் பர்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர், இந்தர் சிங் காந்தி, திலீப் தாக்கூர் உள்ளிட்ட 15 பாஜக எம்எல்ஏக்கள். மற்றும் இந்தர் சிங் காந்தி ஆகியோர் இன்று சபாநாயகர் அறையில் கோஷம் எழுப்பியதாகவும், முறைகேடாக நடந்து கொண்டதாகவும் கூறி சட்டசபை சபாநாயகர் குல்தீப் சிங் பதனியாவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .

பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டிகே சிவக்குமார் :

இப்படியான அரசியல் சூழ்நிலையை சமாளிக்க ஹரியானா முன்னாள் முதல்வர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் இமாச்சல பிரதேசம் விரைந்துள்ளனர்.

Recent Posts

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…

2 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (06/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

2 hours ago

“2026 தேர்தலில் திமுக கூட்டணி தான்., ” திருமாவளவன் திட்டவட்டம்.!

திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…

2 hours ago

“தமிழகத்துக்கு மஞ்சள் அலர்ட்” ..இன்று 4 மாவட்டத்துக்கு கனமழை…வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…

3 hours ago

“ஒரே மேடையில் தவெக தலைவர் விஜயுடன் நான்.?” திருமா உடைத்த ரகசியம்.!

திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…

3 hours ago

சாம்பியன்ஷிப்பை விடுங்கள் ஆஸ்திரேலிய தொடர் மீது கவனம் செலுத்துங்கள் – அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர்!

மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…

3 hours ago