பனிப்பொழிவில் சிக்கிய ஆய்வாளர்கள்! மீட்க போராடும் காவலர்கள்!
தற்போது குளிர்காலம் என்பதால், நாடுமுழுவதும் குளிர் வாட்டிவதைக்கிறது. அதிலும் வட மாநிங்களில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கையே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள லாஹவுல் ஸ்பிடி எனும் மாவட்டத்தில் ஆய்வுக்காக தோட்டக்கலை ஆய்வாளர்கள்10 பேர் சென்றுள்ளனர். மேலும் இருவர் அவர்களுக்கு உதவி செய்ய சென்றுள்ளனர். அங்கு தற்போது கடுமையான பனிபொழிவின் காரணமாக அந்த பகுதியில் இருந்து வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மேலும் அவர்கள் வெளியேறுவதற்கு இருந்த ரோஹ்டாங் எனும் சுரங்கப்பாதையும் மூடிவிட்டது. இதனால், சிக்கிக்கொண்ட ஆய்வாளர்கள் தங்களை மீட்க கோரி, அங்குள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அங்கு, காவலர்கள் விரைந்துள்ளனர்.