உச்சகட்ட பரபரப்பு.! 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!
Himachal Pradesh : கடந்த 27ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் 1 இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல் நடைப்பெற்றது. அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி அபிஷேக் மனு சிங்வியையும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியினர். இதில் 40 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார். 25 உறுப்பினர்கள் கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
Read More – பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜகவுக்கு ஆதரவளித்த காரணத்தால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். மேலும், மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Read More – உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்… பிரதமர் மோடி உத்தரவாதம்!
நேற்று, சட்டசபை விதிகளை மீறி பாஜக எம்எல்ஏக்கள் நடந்து கொண்டதாக கூறி 15 பாஜக எம்எல்ஏக்களை சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா சஸ்பெண்ட் செய்து இருந்தார். இதனை தொடர்ந்து இன்று மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
Read more – அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!
இது தொடர்பாக சபாநாயகர் கூறுகையில், காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 6 எம்.எல்.ஏ.க்கள், தாங்கள் கட்சி சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதால் “கட்சி தாவல் தடை” சட்டத்தின் கீழ் அவர்களை உடனடியாக இமாச்சல பிரதேச சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவிக்கிறேன் என தெரிவித்தார்.