இனி பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடையில்லை.! கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

Karnataka CM Siddaramaiah speak about Hijab

கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த ஜனவரி 20202 ஒரு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் உடைக்கு தடை விதித்தது . இதனை அடுத்து ஹிஜாப் சர்ச்சை கர்நாடக மாநிலம் முழுவதும் வெடித்தது. இதனை தொடர்ந்து அடுத்த (2022 பிப்ரவரி) மாதமே அப்போதைய பாஜக கர்நாடகா அரசு, வகுப்பறையில் எந்த பேதமும் இருக்கக் கூடாது எனவும், அதனால் இனி ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிவித்தது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு விமர்சனங்கள்எழுந்தன.

தீவிரவாத தாக்குதல்.. இணையதள சேவை நிறுத்தம்..!

அரசின் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அங்கும் இஸ்லாமிய சட்டத்தில் ஹிஜாப் அணிவது கட்டாயம் என கூறப்படவில்லை என கூறி அரசின் தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்து இருந்தது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்தலின் போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு காங்கிரஸ் அரசு கர்நாடகத்தை ஆளும் பொறுப்பை பெற்று, சித்தாராமையா முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிறார்.

முதல்வர் சித்தராமையா இந்த ஹிஜாப் உடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில்,  உடை அடிப்படையில் மக்களை பிரித்து சமூகத்தை கடந்த கால பாஜக அரசு பிளவுபடுத்துகிறது. ஹிஜாப் உடைக்கு விதிக்கப்பட்ட தடையை  திரும்பப் பெறுகிறோம். இப்போது ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு தடை இல்லை. பெண்கள் ஹிஜாப் அணிந்து வெளியே செல்லலாம். முந்தைய அரசு உத்தரவை திரும்ப பெறுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.  என்றார்.

ஒருவர் விரும்பும் ஆடையை அணிவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். உடுத்துவதும் உணவு உண்பதும் ஓவரின் தனிப்பட்ட விருப்பம், நாம் ஏன் ஆட்சேபனை செய்ய வேண்டும்? நீங்கள் விரும்பும் உடையை அணியுங்கள், நீங்கள் விரும்பியதைச் சாப்பிடுங்கள், நான் ஏன் கவலைப்பட வேண்டும், வாக்குகளைப் பெறுவதற்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. நாங்கள் அதனை செய்யவும் மாட்டோம் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்