அயோத்தி ராமர் கோயிலின் சிறப்புகள்… இரும்பு இல்லாமல் பிரமாண்ட கட்டுமானம்!

Ram Temple Special

அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்னும் சிறிது நேரத்தில் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது. இன்று நண்பகல் 12.20 மணியில் இருந்து 1 மணிக்குள் பால ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து வைக்கிறார். துல்லியமாக நண்பகல் 12 மணி 29வது நிமிடம் 8 நொடிக்கு தொடங்கி 12:30:32 வரை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். சரியாக 84 நொடிகளில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும். இதன்பிறகு சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ராமர் கோயில் திறப்பு விழாவில், முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அயோத்தியில் குவிந்துள்ளனர். அயோத்தி நகரம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.  இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயிலின் சிறப்புகள் குறித்து பார்க்கலாம். அதாவது, அயோத்தி ராமர் கோயில் 2.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் கட்டடத்தின் மொத்த பரப்பளவு 57 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவில் உள்ளது.

மூன்று தளங்களை கொண்ட ராமர் கோயிலில் மொத்த 12 நுழைவு வாயில் உள்ளது. கோயிலின் 3 தளங்களில் மொத்தமாக 366 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1,800 கோடி ரூபாயில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. மேலும், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இந்திய பாரம்பரிய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பல தலைமுறைகள் தாங்கும் வகையில் கோயிலை கட்டி எழுப்பியுள்ளனர்.

ராமர் கோயில் விழா… சிறப்பு பூஜைகள் விவகாரம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

அதாவது, இந்த கோயில் கட்ட இரும்பு எதையும் பயன்படுத்தவில்லை என்றும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயில் நீட்டிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாகவும் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி க்ஷேத்ரா அறக்கட்டளை கோயில் குழுவின் தலைவர் ஸ்ரீ நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலை வடிவமைத்து முக்கிய கட்டுமான வல்லுநர்களில் இவரும் ஒருவராவார்.

அவர் கூறியதாவது, இந்த கோயிலில் நாங்கள் இரும்பு அல்லது எஃகு என எதையும் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் இரும்பின் ஆயுட்காலம் வெறும் 80-90 ஆண்டுகள் மட்டுமே. இதனால் நீடித்து உழைக்கும் உருக்கை கட்டுமானத்துக்கு பயன்படுத்தி உள்ளோம். மிகச் சிறந்த தரமான கிரானைட், மணற்கல் மற்றும் பளிங்குக் கற்களைக் கொண்டு கோயிலை வடிவமைத்துள்ளனர். லாக் அண்ட் கீ முறையில் கற்களை வைத்து மட்டுமே இந்த கட்டுமானத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதன் கட்டுமானத்திற்கு இஸ்ரோ தொழில்நுட்பம் கூட பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கம் எதாவது ஏற்பட்டால் அதையும் தாங்கும் வகையிலேயே இந்த ராமர் கோயில் கட்டுமானம் மிக சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இந்த கோயிலின் உயரம் 161 அடியாகும். அதாவது, குதாப் மினார் உயரத்தில் 70% ஆகும் எனவும் கூறி, ராமர் கோயிலின் பல்வேறு சிறப்புகள் குறித்து தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்