கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பு! ஐபிஎஸ் அதிகாரியின் அட்டகாசமான செயல்!

Published by
லீனா

கர்நாடகாவில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பு.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகிற நிலையில், சில தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக செல்லும் மக்களிடம், நியமிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

கர்நாடகாவில், தனியார் மருத்துவமனைகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுத் தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் மண்டலம் வாரியாக குழுக்களை அமைத்தார். இந்த குழுக்கள் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், பெங்களூர் ஆர்.ஆர் நகர் மண்டலத்தின் கண்காணிப்பு அதிகாரியாக ஐபிஎஸ் ரூபா பணியமர்த்தப்பட்டார். ஆய்வில் விதிகளை பின்பற்றாமல், எஸ்.எஸ்.எம்.என்.சி மருத்துவமனை, நோயாளிகளிடமிருந்து அதிகப் பணம் வசூலித்து வந்ததாக தெரிய வந்த நிலையில், தனியார் மருத்துவமனையின் பதிவீட்டை ஆராய்ந்ததில், 22 கொரோனா நோயாளிகளிடம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் வரை அதிகமாக வசூலித்தது தெரியவந்தது.

இதனையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி ரூபா மருத்துவமனை நிர்வாகம் 22 பேரிடம் கூடுதலாக வசூலித்த ரூ.24.80 லட்சம் கட்டணத்தை நோயாளிகளுக்கு திரும்ப பெற்று கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Published by
லீனா

Recent Posts

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

14 minutes ago

வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!

வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…

51 minutes ago

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

2 hours ago

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…

2 hours ago

“இங்க யாரு போலீஸ்… யாரு அக்கியூஸ்டுனு தெரியல”.. கவனம் ஈர்க்கும் ‘சொர்க்கவாசல்’ டிரெய்லர்.!

சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…

2 hours ago

சுட சுட சாப்பாடு.. விவசாயிகளுக்கு விருந்து வைத்து ‘நன்றி’ தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…

2 hours ago