High Mobility vehicles: ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பெற்ற பிஇஎம்எல்.!

ஹை மொபிலிட்டி வாகனங்களை தயாரிக்க ரூ.758 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் பெற்றுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஹை மொபிலிட்டி வாகனங்களை (High Mobility vehicles) தயாரிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து 758 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களை பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனம் பிஇஎம்எல் (BEML) பெற்றுள்ளது.
ஹை மொபிலிட்டி வாகனம், கவச சண்டை வாகனங்கள், துருப்புக்கள், வெடிமருந்துகள் மற்றும் கடைகளை செயல்பாட்டு பகுதிகளில் தொலைதூர எடுத்து செல்ல, கடினமான நிலப்பரப்புகளுக்கு நகர்த்த இந்த வாகனம் உதவும் என்று கூறப்படுகிறது.
இந்த வாகனங்கள் கேரளாவில் உள்ள BEML-இன் பாலக்காடு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். மேலும் ஒரு வருட காலத்திற்குள் வாகனங்களை இந்திய ராணுவத்திற்கு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025