கொரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனாவிலிருந்து காத்து கொள்ள உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முயற்சியை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் கொரோனாவிலிருந்து மீண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் டெல்டா மாறுபாட்டின் நடுநிலைப்படுத்தல்’ என்ற தலைப்பில் ஐ.சி.எம்.ஆர். மற்றும் புனேவில் அமைந்துள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா பாதித்து அதிலிருந்து வெளிவந்தவர்கள் இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுக்கு கப்பா மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரிவுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரி மூலமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…