அனைவரும் மோட்டார் வாகனவிதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம்-மத்திய அமைச்சர் நிதின்கட்கரி

Default Image

அனைவரும் மோட்டார் வாகனவிதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம் விதிக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின்கட்கரி   ஆட்டோமொபைல் துறை நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அவர் பேசுகையில் , நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் ஆட்டோ மொபைல் துறையின் பங்களிப்பு பற்றி எனக்கு நன்றாக தெரியும். ஏற்றுமதியில் கணிசமான அளவு வாகன உற்பத்தி துறை பங்களிப்பு உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எண்ணம் இல்லை.

மேலும்  அனைவரும் மோட்டார் வாகனவிதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவரும் விதிகளை பின்பற்றி அபராதம் என்பதே இல்லை என்ற நிலை வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்