அமெரிக்காவின் ஹெச்1பி விசா குறித்த நடைமுறையில் பெரிய மாற்றங்கள் இருக்காது!

Default Image

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்காவின் ஹெச்1பி(H-1B) விசா குறித்த நடைமுறையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் ஹெச்1பி(H-1B) விசா குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ஹெச்1பி(H-1B) விசா விவகாரத்தை இந்திய அரசு தொடர்ந்து கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

விசா நடைமுறையில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் இந்தியர்களை பாதிக்காமல் இருக்க, தொடர்ந்து பேசிவருவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்