பொருளாதார வளர்ச்சிக்கு பாரம்பரியம் இன்றியமையாத சொத்து.! பிரதமர் மோடி பேச்சு.!
வாரணாசியில் ஜி20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் பேசி வருகிறார்.
அந்த கூட்டத்தில் பேசிய அவர், “கலாச்சார பாரம்பரியம் என்பது வெறும் கல்லில் போடப்படுவது மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகைகளும் கூட தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் ஆகும்.” என்றார்.
மேலும், “பொருளாதார வளர்ச்சிக்கும் பல்வகைப்படுத்தலுக்கும் பாரம்பரியம் இன்றியமையாத சொத்து என்று நாங்கள் நம்புகிறோம்” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.