கூகுளில் தகவல்களை தேடும் நபரா நீங்கள் ? இதோ உங்கள் வங்கி கணக்கு காலி எச்சரிக்கை !

Default Image

நாம் இன்றைய இணைய உலகில் நமக்குத்தேவையான உணவு முதல் உடை வரை கூகுளை சார்ந்தே பயணிக்கிறோம்.அப்படி நாம் தேடுகையில் எது உண்மை எது போலி என பார்ப்பதில் மிகவும் கவனக்குறைவாக இருக்கிறோம் இதை பயன்படுத்திக்கொண்டு ஹாக்கர்கள் நம் பணத்தை திருட சுலபமாக வழிவகுக்கிறது.

சிறிது நாட்களுக்கு முன்னர்  பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல உணவு நிறுவனமான ZOMATO வில் உணவு ஆர்டர் செய்ததில் சரியில்லை என்று மீண்டும் பணத்தை திருப்பி கேட்க சுமோட்டோவின் என்னை கூகுளில் தேடியுள்ளார் அப்பொழுது அங்கு இருந்த போலியான என் என அறியாமல் அதை தொடர்பு கொண்டு தனது பணத்தை திருப்பி அளிக்கும்படி கூறியுள்ளார் .ஆனால் மறுமுனையில் பேசிய நபரோ ஒரு போலி அவர் சொன்னதை பின்பற்ற இந்த பெண்ணின்  வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் திருடப்பட்டது.

இதைப்போல் சென்னையில் ஒரு நபருக்கு இதைப்போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது, தான் தொடர்புகொள்வது ஒரு போலியான என் என அறியாமல் தொடர்புகொள்ள மறுமுனையில் பேசிய நபர் உங்கள் UPI ஐடி யை கூறும்படி கேட்டுள்ளார் .இவரும் பணத்தை திருப்பி அளிக்கும் முறைபோல என எண்ணி அவர் கேட்ட விவரங்களை கூறியுள்ளார் .அதன் பின் தொடர்புகொண்ட அந்த உங்கள் எண்ணுக்கு வந்த OTP யை கூறும்படி கேட்க இவர் நம் சற்று சுதாரித்துக்கு கொண்டு .அந்த என்னை மாற்றிக்கூற அவருடைய தொலைபேசிக்கு உங்கள் கணக்கில் இருந்து  5000 எடுக்க முடியவில்லை தவறான பின் என குறுஞ்செய்தி வந்துள்ளது .இவர் செய்த் இந்த சாமர்த்தியத்தால் பணம் தப்பியது.

ZOMATO நிறுவனம் இதுகுறித்து வழக்கு தொடர்ந்துள்ளது .கூகுளில் தேடும் நபர் தேடும் போது கிடைக்கும் பதில்களில் முதல் மூன்று இடங்களை அதிகம் பேர் தேர்தெடுப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது .சுலபமாக கிடைக்கிறது என்பதற்க்காக நம் கவனக்குறைவு நம் பணத்தை இழக்க வழிவகுக்கிறது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்