ஆதார் அட்டை எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை பார்க்க எளிய வழி இதோ..!
ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் இருக்கும் அனைவர்க்கும் குறைந்தது வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அடையாள அட்டை ஆகும். இந்த ஆதார் அட்டை பொறுத்தவரை சமையல் எரிவாயு இணைப்பு முதல் உணவு, உர மானியம், வங்கிக்கணக்கு, செல்போன் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட மத்திய அரசின் பல மானியங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
தற்சமயம் உங்கள் ஆதார் மற்றும் மொபைல் நம்பரையும் இணைப்பது மிகவும் எளிமையான முறைக்கு கொணடுவரப்பட்டுள்ளது, அதன்படி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது பயனர்களை ஒரு முறை கடவுச்சொல் (OTP) அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க அனுமதிக்கின்றனர்.
மேலும் ஐவிஆர்எஸ் (IVRS) எனப்படும் இந்த செய்முறையின்கீழ், 14546 என்கிற டோல்-ப்ரீ எண்ணை கொண்டு உங்களின் மொபைல் எண்ணை ஆதார் உடன் இணைக்க முடியும். ஆதார் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, குறிப்பாக நம்முடைய ஆதார் சார்ந்த தகவல்கள் பாதுகாப்புடன் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
யுஐடிஏஐ மேலும் கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை மிக எளிமையாக தெரிந்து கொள்ள யுஐடிஏஐ வலைதளத்தில் பார்க்க முடியும். குறிப்பாக இந்த வலைதளத்தில் புகார் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கவும் இணையதளம் உதவுகிறது.
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் சாதனங்களில் https://resident.uidai.gov.in/notification-aadhaar என்ற இந்த வலைதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அடுத்து உங்கள் 12 இலக்க ஆதார் எண் மற்றும் பாதுகாப்பு குறியீட்டினை அந்த வலைதளத்தில் உள்ளிடவும்.
- அதன்பின்பு ஒடிபி-ஐ பெற அந்த வலைபக்கத்தில் கிளிக் செய்ய வேண்டும், பின்பு உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு அந்த ஒடிபி அனுப்பி வைக்கப்படும்.
- பின்னர் அந்த வலைதளத்தில் ஒடிபி-ஐ உள்ளிட வேண்டும்.
அடுத்து கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை சரிபார்க்க முடியும்.