தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.!
Electoral Bonds : பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்கள் கட்சிக்காக நிதி பெரும் திட்டத்தை ஆளும் பாஜக அரசு கொண்டு வந்தது. அதன்படி ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி மாதம் 2024 வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு கட்சிகள் நிதி பெற்று வந்தன. இந்த தேர்தல் பத்திர நடைமுறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தடை செய்தது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி மூலம் மட்டுமே பெறக்கூடிய இந்த தேர்தல் பத்திர விவரங்களை பாரத ஸ்டேட் பேங்க் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Read More – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.!
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டேட் பேங்க் நேற்று முன்தினம், தேர்தல் பத்திரங்கள் மூலம் நடைபெற்ற பரிவர்த்தனை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அதனை தேர்தல் ஆணையம் நேற்று தங்களது அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கிய நிறுவனங்களின் பெயரும், நிதி வாங்கிய கட்சிகளின் விவரமும் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் பெற்றுள்ளது, எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது என்ற விவரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு நிதி கொடுத்தது என்ற விவரங்கள் தெரியவரவில்லை.
Read More – தேர்தல் பத்திரங்கள்! விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்… கோடிகளை கொட்டி கொடுத்த நிறுவனங்கள்
அதன்படி தேர்தல் பத்திரங்களை கொடுத்து பணம் பெற்ற கட்சிகளில் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, அதிமுக, பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஜனசேனா, சிவசேனா, ஒய்ஆர்எஸ் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி மாதம் வரையில் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 22,030 பத்திரங்கள் மட்டுமே அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 187 தேர்தல் பத்திரங்கள் பிரதமர் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
Read More – முகத்தில் வழிந்த ரத்தம்.. பதறிய தலைவர்கள்.. பத்திரமாக வீடு திரும்பிய மம்தா.!
இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பணம் பெற்ற கட்சிகளின் விவரங்கள் தற்போது கணக்கிடப்பட்டு வெளியாகி வருகிறது. அதன்படி ,
- பாஜக 6,060 கோடி ரூபாய்.
- திரிணாமுல் காங்கிரஸ் 1,609 கோடி ரூபாய்.
- காங்கிரஸ் கட்சி 1,421 கோடி ரூபாய்.
- பாரதிய ராஷ்டிரிய சமிதி 1,214 கோடி ரூபாய்.
- திமுக 639 கோடி ரூபாய்.
- ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் 337 கோடி ரூபாய்.
- தெலுங்கு தேசம் 218 கோடி ரூபாய்.
- சிவசேனா 159 கோடி ரூபாய் .
- ராஷ்டிரியா ஜனதா தளம் 72 கோடி ரூபாய்.
- ஆம் ஆத்மி 65 கோடி ரூபாய்.
ஐக்கிய ஜனதா தளம் 43 கோடி ரூபாய் , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 13.5 கோடி ரூபாய், அதிமுக 6.10 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பணமாக பெற்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.