நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2023 பட்ஜெட்டில் மாத சம்பள ஊழியர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால், இந்த பட்ஜெட் தான் பெரிய பட்ஜெட் தாக்கல் நிகழ்வாகும். அடுத்த வருடம் குறுகிய கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். ஆதலால் இந்த பட்ஜெட் மீது பலரும் நம்பிக்கை கொண்டு எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்திய பொருளாதாரத்தில் அதிக வரி செலுத்தும் பங்களிப்பாளராக இருப்பவர்கள் இந்தியாவில் பணியாற்றி மாதச்சம்பளம் வாங்கும் பணியாளர்கள் தான். கடந்த ஆண்டில் மொத்த வருமான வரி கணக்கில் 50 சதவீதம் வரிசெலுத்தியவர்கள் மாதச் சம்பளம் பெரும் நபர்களால் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் மத்திய பட்ஜெட் 2023 ஆனது இந்த மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மிகவும் எதிர்பார்த்து சில முக்கிய அறிவிப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
மெட்ரோ நகரங்களாக குறிப்பிடப்படும் டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நான்கு நகரங்களில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள் முக்கியமாக ஐடி துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தான் இங்கு அதிகம். இதில் சுமார் 1.5 மில்லியன் ஐடி ஊழியர்கள் பெங்களூரு நகரத்தில் உள்ளனர். இந்த மெட்ரோ நகரங்களில் வாழ்க்கை நடத்துவதற்கான செலவு என்பது மிகவும் அதிகரித்துள்ளது.
ஆதலால், அது குறித்து வரிச்சலுகையை ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரிச்சலுகை மூலம் அவர்களின் வருமானம் ரூபாய் 2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் பொருந்தாது. அதனை தற்போது குறைந்தபட்சம் 5 லட்சம் ஆக உயர்த்தப்படுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வருமான வரி சட்டத்தின்படி, வீடு வாங்குபவர்கள் மாத வருமானம் பெரும் வருமான வரி செலுத்தும் ஊழியர்கள் வீட்டு கடனுக்கான வருடம் வட்டிக்கு மட்டும் இரண்டு லட்சம் வரை வரி விலக்கு கோர அனுமதி இருக்கிறது. அதனை 5 லட்சமாக உயர்த்த வரி செலுத்தபடுமா என எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல, கல்வி கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவைதான் நாட்டின் கடன் மதிப்பீட்டில் சுமார் 35 சதவீதத்தை ஆட்கொண்டுள்ளது. வரிச்சலுகை சட்டம் 80Eயின் படி கல்வி கடனுக்கு மட்டும் வட்டி விலக்கு அளிக்கப்படுகிறது. தனி நபர் கடனுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு தனிநபர் கடன் பெரும் மாத சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் சில சலுகைகளை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…