பட்ஜெட் தாக்கல் செய்த போது நடந்த நிகழ்வுகள் ஒரு பார்வை !
ஓராண்டுக்கு அரசு வருவாய் மற்றும் செலவு செய்யும் விதங்கள் ஆகியவை குறித்த விரிவான அறிக்கையை பட்ஜெட் அல்லது நிதிநிலை அறிக்கை என கூறுகிறோம். அதாவது அரசு எந்த துறையில் இருந்து வருவாய் எடுக்கிறது. எந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறது என அதற்கான நிதியை ஒதுக்குவதற்கு பெயர் தான் பட்ஜெட்.
முதல் பட்ஜெட்:
இந்திய முதல் பட்ஜெட்டை ஆங்கிலேயர் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார்.
முதல் பெண் நிதி அமைச்சர்:
இந்தியாவின் முதல் பெண் நிதி அமைச்சராக இந்திரா காந்தி 1970-1971-ம் ஆண்டு இருந்தார்.அக்காலத்தில் பட்ஜெட்டை வாசித்த முதல் பெண்மணியும் என்ற பெருமையையும் பெற்றார்.
93 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்தது:
1924-ஆம் ஆண்டு பொது பட்ஜெட்டில் இருந்து ரயில்வே பட்ஜெட் தனியாக பிரிந்தது. அதன் பின்னர் 2017 -ஆம் ஆண்டு மீண்டும் இணைக்கப்பட்டது. இதன் மூலம் 93 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பொது பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட் இணைந்தது.
பட்ஜெட் தாக்கல் செய்த பிரதமர்:
நேரு குடும்பத்தில் பிரதமராக இருந்த ஜவர்கலால் நேரு , இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி ஆகிய மூன்று பேரும் பட்ஜெட் தாக்கல் செய்தனர்.
பட்ஜெட் தாக்கல் செய்த குடியரசுத் தலைவர்:
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி , ஆர் வெங்கட்ராமன் ஆகிய இருவரும் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தனர்.
பட்ஜெட் தாக்கலில் ஏற்பட்ட மாற்றம்:
பட்ஜெட் தாக்கல் 1998-ஆம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆங்கிலேயர் வழக்கப்படி மாலை 6 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.ஆனால் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பட்ஜெட் தாக்கல் நேரம் காலை 11 மணி ஆக மாற்றப்பட்டது.