5 மாநிலங்களில் பிப்ரவரி 10ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தரபிரதேசம், பஞ்சாப் , உத்தரகாண்ட் , மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார்.
உத்தரபிரதேசம் 403 தொகுதிகளையும், பஞ்சாப் 117 தொகுதிகளையும், உத்தரகாண்ட் 70 தொகுதிகளையும், மணிப்பூர் 60 தொகுதிகளையும், கோவா 40 தொகுதிகளையும் கொண்டது. 5 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 21-ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 மாநிலங்களில் பிப்ரவரி 10-ஆம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரண்டு கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
1-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 10-ஆம் தேதி (உத்தரப்பிரதேசம்)
2-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதி (உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா )
3-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 20-ம் தேதி (உத்தரப்பிரதேசம்)
4-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 23-ம் தேதி (உத்தரப்பிரதேசம்)
5-ம் கட்ட தேர்தல் பிப்ரவரி 27- ம் தேதி (உத்தரப்பிரதேசம், மணிப்பூர்)
6-ம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதி (உத்தரப்பிரதேசம், மணிப்பூர்)
7-ம் கட்ட தேர்தல் மார்ச் 7-ம் தேதி நடைபெறுகிறது. (உத்தரப்பிரதேசம்)
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…