இனிமேல் இந்த மாநிலத்தில் இரவு 12 மணிக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்காது..!
உத்திரபிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்காது என உ.பி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி, இமாச்சல், உத்திரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி டெல்லியில் ஏற்கனவே கடும் பனிமூட்டம் காரணமாக சாலை போக்குவரத்துகள் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது உத்திரபிரதேசத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்காது என உ.பி அரசு தெரிவித்துள்ளது.