இனிமேல் பிப்-14 ‘Cow Hug Day’ – இந்திய விலங்குகள் நல வாரியம்
பிப்.14-ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடாமல் Cow Hug Day’ என கொண்டாட வேண்டும் என கொண்டாட வேண்டும் என மத்திய விலங்குகள் நலவாரியம் அறிவிப்பு.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த நாளை காதலர் தினமாக கொண்டாடாமல் Cow Hug Day’ என கொண்டாட வேண்டும் என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் பிப்ரவரி 14ம் தேதி Cow Hug Day என கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.