இனிமேல் இதற்கு ஆதார் கட்டாயம் – புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு..!
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவிப்பு.
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது. ஆளுநர் தமிழிசையின் உத்தரவின் படி அனைத்து துறை தலைவர்கள் செயலர்கள் இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழக அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற மக்கள் அடையாள ஆவணமாக ஆதார் தர வேண்டும் என்றும் தமிழக அரசின் நிதித்துறை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.