சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜார்கண்ட் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை இரவு கைது செய்தனர். விசாரணைக்கு வரும் முன்னரே ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வந்திருந்தார் சோரன்.
ஹேமந்த் சோரன் கைது எதிரொலி… நாடாளுமன்றம் தொடங்கியதும் அமளி.! எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு.!
ஹேமந்த் சோரனிடம் பல மணிநேர விசாரணை முடிந்து பின்னர் அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்யப்பட்டார். பின்னர், ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பாய் சோரன் ஆட்சியமைக்க புதன் இரவு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் உரிமை கோரினார்.
இதனை அடுத்து நேற்று நள்ளிரவு சி.பி.ராதாகிருஷ்ணன், சம்பாய் சோரனை ஜார்கண்ட் மாநில முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க அழைத்தார். இதனை அடுத்து தற்போது ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஆளுநர் மாளிகையில், சம்பாய் சோரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் முன்னிலையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பதவி பிரமாணத்தை ஆளுனர் சிபி.ராதாகிருஷ்ணன் செய்து வைத்தார்.
ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த 67 வயது சம்பாய் சோரன், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தின் 12வது முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…