சென்னை: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். இவர் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதே போன்ற வழக்கில் கைதாகி இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக ஜூன் 1 வரையில் ஜாமீன் வழங்கியது. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஜாமீன் அளிக்கப்படுவதாகவும் நீதிபதி அமர்வு குறிப்பிட்டனர். இதே தீர்ப்பை மேற்கோள்காட்டி ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் தரப்பு கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதும் , சோரன் கைதும் ஒன்றல்ல என்றும், வழக்கு விசாரணையின் போதே சாட்சிகளை கலைக்க ஹேமந்த் சோரன் முயற்சித்தார் என்றும் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர்.
இதனை அடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டது.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…