கெஜ்ரிவாலை சுட்டிகாட்டிய ஹேமந்த் சோரன்.! தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!

சென்னை: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடையாது. – உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். இவர் தனது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதே போன்ற வழக்கில் கைதாகி இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக ஜூன் 1 வரையில் ஜாமீன் வழங்கியது. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஜாமீன் அளிக்கப்படுவதாகவும் நீதிபதி அமர்வு குறிப்பிட்டனர். இதே தீர்ப்பை மேற்கோள்காட்டி ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கில் இடைக்கால நிவாரணம் கோரப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் தரப்பு கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதும் , சோரன் கைதும் ஒன்றல்ல என்றும், வழக்கு விசாரணையின் போதே சாட்சிகளை கலைக்க ஹேமந்த் சோரன் முயற்சித்தார் என்றும் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர்.
இதனை அடுத்து இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, ஹேமந்த் சோரன் கைதுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து ஹேமந்த் சோரன் தரப்பு தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!
April 4, 2025