ஹேமந்த் சோரன் கைது.! ஜார்கண்ட் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு.!

Hemant soran - Sambai soran

ஜார்கண்ட் மாநிலத்தில்,  நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு முதற்கட்ட விசாரணை கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா! அமலாக்கத்துறை கைது

முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் சோரன். ஆனால் நீதிமன்றம்மனுக்களை தள்ளுபடி செய்யவே நேற்று அமலகத்துறை முன் ஆஜரானார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்கண்டு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டார். இதன் பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர் சோரன். பல மணிநேர விசாரணை முடிந்த பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேமந்த் சோரன் கைதுக்கு பின்னர் அடுத்த ஜார்கண்ட் மாநில முதல்வர் யார் என்று கேள்வி எழுந்தது. இதில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா மற்றும் ஜார்கண்ட் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சம்பாய் சோரன் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவுக்கு ஆதரவு இருக்கும், அவர்தான் அடுத்த முதல்வராக வருவார் என கூறப்பட்ட நிலையில், அவர் எம்எல்ஏவாங்க இல்லை. இந்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தல் வைக்கவும் முடியாது என்ற காரணத்தால் அவருக்கு எம்எல்ஏ ஆதரவு குறைவாக இருந்துள்ளது.

சம்பாய் சொரணை முதல்வராக்க வேண்டும் என்று பலரும் ஆதரவளித்ததை எடுத்து சம்பா சூரன், தன்னை முதல்வர் பதவிக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

முன்னதாக ஆளும் ஜார்கண்ட் மாநில முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியானது, ஜார்கண்ட் முக்தி மோட்சாவுக்கு என்றும் துணையாக, ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்