சமோசா மற்றும் ஜுஸ் போன்ற பொருள்களை குரங்குகள் பறித்து சாப்பிடுவதாக -ஹேமமாலினி புகார்..!

Default Image

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா தொகுதியின் பாஜக எம்.பியும் ,நடிகையுமான ஹேமமாலினி நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் கூறும்போது ,என் தொகுதியான மதுராவிற்கு வரும் பக்தர்களின் பொருட்களை குரங்குகள் பறித்து தொல்லை தருகிறது. எனவே குரங்குகளுக்கான வனப்பகுதியை அரசு உருவாக்க வேண்டும்.
இது போன்று  உணவுப்பழக்கத்தால் குரங்குகளுக்கு ஒருவித நோய் பரவுகிறது. பழங்களுக்கு பதிலாக மனிதர்களிடம் இருந்து சமோசா மற்றும் ஜுஸ் போன்றவற்றை பறித்து குரங்குகள் சாப்பிடுகிறது என கூறினார்.
இதை தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் டெல்லியிலும் குரங்குகள் தொல்லை அதிகம் இருப்பதாக புகார் கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்