கர்நாடகாவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க உதவி எண்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், தடுப்பூசி , ஆக்சிஜன், படுக்கைகள் பற்றாக்குறை பல இடங்களில் காணப்படுகிறது.
இந்நிலையில், தொற்றால் இறந்தோரை அடக்கம் பண்ணுவதற்கு கூட இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள பீன்யா, கெங்கேரி, சம்மனக்கல்லி, பகதூர் உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள எரியூட்டும் தளங்களில் முன்பதிவு செய்து உடலை எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு எரியூட்டும் தளத்தில் 500 சடலங்கள் வரை எரிக்க முடியும். தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனை அல்லது வீட்டில் உயிரிழக்கும் பட்சத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 84 95 99 84 95 என்ற உதவி எண்ணை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தேவையை இடம், நேரம், மற்றும் சில தகவல்களை பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். சடலங்களை எடுத்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸுக்கோ, எரியூட்டும் தளத்திற்கோ கட்டணம் கொடுக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…