கர்நாடகாவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க உதவி எண்….!

Default Image

கர்நாடகாவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க உதவி எண்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், தடுப்பூசி , ஆக்சிஜன்,  படுக்கைகள் பற்றாக்குறை பல இடங்களில் காணப்படுகிறது.

 இந்நிலையில், தொற்றால் இறந்தோரை அடக்கம் பண்ணுவதற்கு கூட இடம் இல்லாத  நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள பீன்யா, கெங்கேரி,  சம்மனக்கல்லி, பகதூர் உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள எரியூட்டும் தளங்களில் முன்பதிவு செய்து உடலை எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு எரியூட்டும் தளத்தில் 500 சடலங்கள் வரை எரிக்க முடியும்.  தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனை அல்லது வீட்டில் உயிரிழக்கும் பட்சத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 84 95 99 84 95 என்ற உதவி எண்ணை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தேவையை இடம், நேரம், மற்றும் சில தகவல்களை பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். சடலங்களை எடுத்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸுக்கோ,  எரியூட்டும் தளத்திற்கோ கட்டணம் கொடுக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்