காவல்துறை அதிகாரிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் – இன்று முதல் அமல்!
புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை.
புதுச்சேரியில் காவல்துறை அதிகாரிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பது கடந்த அக்டோபர் 31முதல் அமலுக்கு வந்தது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர் மீது கடும் நவடடிக்கை எடுக்கப்படும் எனவும் புதுச்சேரி போக்குவரத் துறை தெரிவித்திருந்த நிலையில், தற்போது காவல்துறை அதிகாரிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.