#HelicopterCrash:இன்று ராணுவ விமானம் மூலம் மறைந்த முப்படை தளபதியின் உடல் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.!
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரியின் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த கருத்தரங்கில் பங்கேற்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 9 பேர் தமிழகம் வந்தார்கள்.இதனையடுத்து,சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெளிங்டனுக்கு முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருடன் ராணுவ ஹெலிஹாப்டர் புறப்பட்டது.
ஆனால், ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்தது.இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.
With deep regret, it has now been ascertained that Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and 11 other persons on board have died in the unfortunate accident.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட இறந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது.மேலும்,திருவனந்தபுரம் விமானப் படையின் தலைமை தொழில்நுட்ப குழு இன்று விபத்து நடந்த இடத்தில் விசாரணையை தொடங்குகிறது.
இந்நிலையில்,இன்று மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.
இதனையடுத்து,டெல்லியில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,டிசம்பர் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இருவரது உடல்களும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் டெல்லி கண்டோன்மன்டில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையில்,நேற்று வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த முப்படை முதல் தலைமை தளபதி பிபின் ராவத் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அங்கு வைக்கப்பட்ட புத்தகத்தில் இரங்கல் குறிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்தார்.
மேலும்,பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர்,உள்துறை அமைச்சர் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.