ஹெலிகாப்டர் விபத்து! நியாமான முறையில் விசாரணை – விமானப்படை தளபதி

Default Image

ஹெலிகாப்டர் விபத்து குறித்து முழுமையான விசாரணை முடியும் முன்பு எந்த விவரங்களையும் சொல்ல விரும்பவில்லை என விமானப்படை தளபதி.

கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விசாரணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை தளபதி வி.ஆர் சவுத்ரி, ஹெலிகாப்டர் விபத்து விசாரணை நியமன முறையில் நடந்து வருகிறது. விபத்து தொடர்பான ஒவ்வொரு கோணத்தையும் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது.

எங்கு தவறு நடந்துள்ளது என ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். முழுமையான விசாரணை முடியும் முன்பே எந்த விவரங்களையும் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் கூறுகையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் துரதிருஷ்வசமானது.

ஹெலிகாப்டர் விபத்திற்கு பிறகு, விவிஐபிக்கள் பயணம் தொடர்பான விதிமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் இதற்கு பின்னர், மிக முக்கிய பிரபலங்களின் பயணம், பாதுகாப்பு குறித்த விதிகளை ஆய்வு செய்துள்ளோம் எனவும் கூறிய விமானப்படை தளபதி, பாகிஸ்தான் மற்றும் சீனாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்திய விமானப்படை எச்சரிக்கையாக உள்ளது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்