ஹெலிகாப்டர் விபத்து : அவதூறு பரப்பிய பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்…!

Default Image

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய பாகிஸ்தான் ட்விட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவை முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த ராணுவ வீரர்களின் உயிரிழப்பு குறித்து பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் சில தவறாக அவதூறு பரப்பும் வகையில் செய்திகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக இரண்டு பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகள் மீது வழக்கு பதிவு செய்து முடக்கப்பட்டுள்ள்ளதுடன், தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறையின் சைபர் கிரைம் பிரிவு இந்த இரு டுவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்