#Justnow:பரபரப்பு…உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிஹாப்டர் அவசரமாக தரையிறக்கம்!
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால்,வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து,வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் கவுஷல்ராஜ் சர்மாவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் PTI கூறுகையில்:”உபி முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.அதன்பின்னர்,வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.வாரணாசியில் இரவு தங்கிவிட்டு,இன்று காலை லக்னோவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.அப்போது முதல்வரின் ஹெலிகாப்டரை ஒரு பறவை மோதியது.அதன் பிறகு தரையிறங்க வேண்டியிருந்தது”என்று தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து,முதல்வர் யோகி அவர் அரசு விமானம் மூலம் லக்னோ புறப்படுகிறார் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath’s chopper made an emergency landing soon after take off in Varanasi. Reportedly chopper was hit by bird andthe chopper landed safely
The CM was on his way to #Lucknow.#YogiAdityanath #Varanasi #UttarPradesh #banaras pic.twitter.com/mETcAninw3
— ᭄ Priya kᵃur ࿐ ???? (@ItsPriyaKaur) June 26, 2022