டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம்!
புது டெல்லியின் பிராந்திய பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில், டெல்லி சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்தது. இன்று காலை பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருந்ததால், போக்குவரத்து சிறிது பதிக்கப்பட்டது.
இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் டெல்லியின் பெரும்பாலான இடங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான தீவிர மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதற்கிடையில், மேகமூட்டமான வானத்துடன் 12-20 கிமீ வேகத்தில் டெல்லியின் மேற்கில் இருந்து மேலோட்டமான காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.