மகாராஷ்டிராவில் கனமழை, மின்னல் – 13 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிராவில் நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் மின்னலில் சிக்கி 13 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அவுரங்காபாத், லடூர், உஸ்மனாபாத், பிரபானி, நந்தெட், பீட், ஜலானா மற்றும் ஹிங்ஹொலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
இந்நிலையில் இந்த கன மழை வெள்ளம் மற்றும் மழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கியதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கிய 560 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.