ராஜஸ்தானில் கனமழையால் 12 பேர் உயிரிழப்பு.!
ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் குறைந்தது 12 பேர் உயிரிழப்பு.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன. மேலும், இந்த கனமழைக்கு அப்பகுதியில் 12 பேர் உயிரிழந்ததாக டோங்க் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டோங்க் மாவட்ட ஆட்சியர் சின்மயி கோபால் கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறதுஎன்று கூறியுள்ளார்.