மகாராஷ்டிராவில் தொடர் கனமழை – இதுவரை மழைக்கு 136 பேர் உயிரிழப்பு!!
மகாராஷ்டிராவில் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் ராய்கட், சத்தாரா, கோந்தியா, சந்திரபூர், ரத்னகிரி, புனே, பால்கர், நாக்பூர் போன்ற மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்குகிறது.
இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு, குடியிருப்பு வீடுகள் இடிபாடு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 136 பேர் நேற்று மாலை வரை உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் எனும் கிராமத்தில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், கிட்டத்தட்ட 36 வீடுகள் மீது பாறைகள் சரிந்ததில் 47 பேர் உடல் நசுங்கி பலியானதாகவும், 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை படை மற்றும் ராணுவ அணிகளும் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மீட்கப்படுபவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.