இமாச்சலில் கனமழை: நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு…பொதுமக்கள் அவதி.!

Heavy rains in Himachal

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கால் அநேக இடங்களில் சாலைகள் சீர்குலைந்துள்ளது.

பரவ மலை தொடங்கியுள்ள நிலையில், வாட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை மிரட்டி வருகிறது. அந்த வகையில், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். குறிப்பாக, இமாச்சலில் பியாஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மேலும், கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தின் சிம்லா – கல்கா இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதால் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. மது மட்டும் இல்லாமல், கனமழை காரணமாக மாண்டியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்