Breaking:டெல்லி ஏர்போட்டில் விமானங்களை சூழ்ந்த மழைநீர்…!
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் ஏர்போட்டில் விமானங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது.
டெல்லியில் அதிகாலை முதல் பெய்து வரும் கன மழையால்,இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும்,விமான நிலையம் முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Delhi: Waterlogging at Indira Gandhi International Airport (Terminal 3) after national capital received heavy rain
As per India Meteorological Department (IMD), Delhi will witness ‘generally cloudy sky, heavy rain/thundershowers, very heavy rain at isolated places towards night’ pic.twitter.com/q36727krfB
— ANI (@ANI) September 11, 2021
விமான சேவைகள் முடங்கியது குறித்து டெல்லி சர்வதேச விமான நிலையம் கூறுகையில்:”நான்கு உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமானம் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டன, தேசிய தலைநகரில் கனமழை காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். திடீரென பலத்த மழை பெய்ததால், சிறிது நேரம், முகத்துவாரத்தில் தண்ணீர் தேங்கியது. அதை ஆராய எங்கள் குழு உடனடியாக சீரமைக்கப்பட்டது மற்றும் பிரச்சினை தீர்க்கப்பட்டது”,என்று தெரிவித்துள்ளது.
இதேபோல,டெல்லி நகர சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.